தங்களின் வருகைக்கு நன்றி

Tuesday, May 3, 2011

பிள்ளைகள் கல்வியில் பெற்றோர்க‌ளின் க‌ட‌மைக‌ள்

   பள்ளி ஆண்டு இறுதித்தேர்வை எழுதி முடித்து அதன் முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

     வ‌ரும் க‌ல்வியாண்டு முத‌ல் “ச‌ம‌ச்சீர் க‌ல்வி” என்ற‌ க‌ல்வி முறையை 10 ஆம் வ‌குப்பு வ‌ரை த‌மிழ‌க‌ அர‌சு அறிமுக‌ப்ப‌டுத்துகிற‌து. இதில் அனைவ‌ருக்கும் ஒரே க‌ல்வி முறையாக‌ ஒரே பாட‌புத்த‌க‌ம், ஒரே மாதிரியான‌ தேர்வுக‌ள் ந‌டைப்பெறும்.( State Board ,மெட்ரிக் பாட‌ங்க‌ள் அனைத்தும் ஒரே பாட‌மாக‌)

பிள்ளைகள் கல்வியில் பெற்றோர்க‌ளின் க‌ட‌மைக‌ள்:

"ஆசிரிய‌ர் தன் மாண‌வ‌னுக்கு இர‌ண்டாவ‌து பெற்றோர்
பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு இர‌ண்டாவ‌து ஆசிரிய‌ர்" என்ற‌ புதுமொழிப்ப‌டி பெற்றோர்க‌ள் தங்க‌ள் பிள்ளைக‌ளை ப‌ள்ளிக்கு அனுப்பி க‌ல்வி க‌ற்க‌ வைக்கின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்கள் த‌ன் பிள்ளைக‌ளை ப‌ள்ளிப்ப‌டிப்பு க‌டைசி வ‌ரை க‌ண்காணிக்கிறார்க‌ளா? (குறிப்பாக‌ ந‌ம‌தூரில்) என்ப‌து கேள்விக்குறியாக‌வே இருக்கிற‌து.

       பெற்றொர்கள் தம் பிள்ளைகளை ஒருசிலர் வெளியூர்களிலும் ஒருசிலர் உள்ளூர்களிலும் படிக்க வைக்கின்றனர். வெளியூர்களில் படிக்க வைக்க காரணம் கேட்டால் உள்ளூர் பள்ளிகளில் கல்வித்தரம் சரியில்லை என்ற உட்கருத்துதான். ஆனால் அதுவல்ல காரணம் உண்மை என்னவென்றால் தம்பிள்ளைகளை கண்காணிக்கப் படாததே காரணம்.

        தம்பிள்ளை வெளியூரில் படித்து முன்னேறி இருக்கிறானா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கு 20% தான் ஆம் என்ற பதில் வருகிறது. காரணம் பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து கண் காணாத இடத்தில் இருப்பதுதான். அவன் என்ன செய்கிறான்? அவன் நடப்பு எப்படி? என்பது பற்றி ஒன்றுமே அறியாமல் இருக்கின்றனர்.

     ஆனால் இப்பொழுது வெளியூர் ஹாஸ்டல் மற்றும் பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில் 50% மாணவர்கள் மட்டுமே ஒழுங்குடன் இருக்கின்றனர். மீதம் 50% மாணவர்களுக்கு கல்வி வளர்கிறதோ இல்லையோ கூடவே கெட்ட பழக்கவழக்கங்களும் வந்து விடுகிறது.

      இன்று நமதூரில் பெரும்பாலான பெற்றோர்கள் வெளியூரில் படித்த தம் பிள்ளைகளை பாதியில் நிறுத்தி உள்ளூர் பள்ளிகளில் சேர்கின்றனர். அந்த பிள்ளைகளை பரிசோதித்த விதத்தில் அதே பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை விட புதிதாக உள்ள மாணவர்களிடம் சில கெட்டப் பழக்கங்களை காண முடிகிறது. மேலும் இவர்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களும் கெடுகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தம் பிள்ளைகளை முடிந்த அளவு தம் நேரடிக் கண்காணிப்பில் வைப்பதுதான் இந்தக்கால பிள்ளைகளுக்கு பொருந்தும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகள்

1. பிள்ளைகள் பள்ளிச் சென்ற நேரம் போக மீத‌ நேரங்களில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

2. த‌ம் பிள்ளைகளின் நண்பர்களை பற்றி விசாரித்துக் கொள்ளவேண்டும்.

3. மாலைநேர விளையாட்டைத் தவிர மற்ற நேரங்களில் அனுமதிக்க வேண்டாம்.

4. குறைந்தது வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ தம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று அவர்களின் வருகை பதிவு, தேர்ச்சி விசயங்களைப் பற்றி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரையோ சந்தித்து கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

காரணம் : சில மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவ‌துதான் தெரிகிறது. அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பள்ளிவாசல் , மற்ற ஆள் இல்லா இடங்களில் நேரத்தை கழித்து அதில் புகை பிடித்தல் போன்ற கெட்ட செயல்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

5. பெற்றோர்களின் கூட்டம் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை நடத்தப்படுகிறது. அதில் பெற்றோர்கள் அவசியம் கலந்துக் கொள்ள வேண்டும்.

6. தினமும், விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, உங்கள் முன் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

7. செல்போன்களை அவசியமான நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கொடுக்க வேண்டாம். குறிப்பாக Multimedia செல்போன்கள் கொடுப்பதை அர‌வே தவிற்கவும்

8. பிள்ளைகளை படிப்பை விட்டு இடையில் நிறுத்தாதீர்கள். மேலும் கல்வி அரசு/அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் (ஏழைகளுக்கு 8 ஆம் வகுப்பு வரை) இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.

வாசகர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகிறது.

Thursday, April 7, 2011

வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டியவை

       அன்புள்ளம் கொண்டவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும், இது சட்டமன்ற தேர்தல் காலம் வேட்பாளர்கள் தங்களின் பல்வேறு வாக்குறுதிகளை கூறிக்கொண்டு வாக்குச் சேகரித்தவண்ணம் தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஆகவே வாக்காளர்களாகிய நாம் கீழ்கண்டவைகளை கடைப்பிடிப்பது கட்டாய கடமை என்கிறது இந்திய ஜனநாயகம்.


1. நாம் வாக்களிப்பது இந்திய ஜனநாயக கடமை. ஆகவே கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

2. நாட்டை ஆள்பவரை தேர்ந்தெடுப்பவர்களில் நானும் ஒருவர் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்.

3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் உங்கள் தொகுதியின் பிரதிநிதியாக
 சட்டமன்றத்திற்கு அனுப்பப்படுபவர் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வேட்பாளர்களில் யார், யார்; எப்படி, எப்படி; என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மற்றவர்களிடம் அலசி ஆராயவேண்டாம்.

4. வேட்பாளர்களின் விபரம்/நிலைமை பற்றி தேர்தல் ஆணையமே அவர்களின் வலைப்பதிவில் விபரமாக கொடுத்துள்ளது. ஆகவே (தஞ்சை மாவட்டம் மட்டும்)இங்கே கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

5. சுயமாய் சிந்தித்து அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆகவேதான் வாக்காளர்கள் சிந்திக்க தேர்தல் பிரச்சாரம் ஒரு நாள் முன்பே நிறுத்தப்படுகிறது.

6. நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பதை யாரிடமும் கூற‌வேண்டாம்.

7. வக்காளிக்கச் செல்லும்போது கட்டாயம் வாக்காளர் அடையாளச்சீட்டை கொண்டுச்செல்லுங்கள். அது உங்கள் வீட்டிற்கே அரசு அலுவலர்கள் மூலம் கிடைத்துவிடும்.

8. வாக்குப்பதிவு ரகசியம் காக்கப்படவேண்டும். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதையும் யாரிடமும் கூற‌வேண்டாம். ரகசியமாக வைத்திருங்கள்.

வாக்காளர்களே! வக்களிப்பது நமது உரிமை.

இது நமது நாட்டிற்கு செய்யவேண்டியக் கடமை.
யாருக்காகவும் அல்லாமல் உங்களின் சுய சிந்தனைக்குட்பட்டு வாக்களியுங்கள்! 
உங்கள் வாக்கு இரகசியமாக இருக்கும்.